மஹியங்கனை, ரிதிமாலியத்த பிரதேசத்தில் உள்ள நீரோடையில் இருந்து பாடசாலை மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவி நேற்று பாடசாலை முடிந்து வீடு திரும்பவில்லை என்று பெற்றோர் செய்த முறைப்பாட்டையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமியின் வீட்டிலிருந்து ஒன்றரை கீலோ மீற்றர் தொலைவிலுள்ள நீரோடையில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
09 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சிறுமி எவ்வாறு உயிரிழந்திருக்கலாம் என்பது குறித்து இதுவரை தெரிய வராத நிலையில் மஹியங்கனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.