Post views-

புல்மோட்டையில் 450 பயணாளிகளுக்கான இலவச குடிநீர் திட்டமும் இப்தார் நிகழ்வும்



திருமலை மாவட்டத்தின் புல்மோட்டை பிரதேசத்தில் இலவச குடிநீர் விநியோகத்திற்கான வவுச்சர் மற்றும் இப்தார் நிகழ்வும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வரின் தலைமையில் 17.06.2017ஆந்திகதி (இன்று) பி.ப.4.00 மணியளவில் நடைபெற்றது.

புல்மோட்டை பிரதேசத்திலுள்ள தெரிவுசெய்யப்பட்ட 450 பயனாளிகளுக்கு இலவசமாக குடி நீர் இணைப்பினை சவூதி அரேபிய நாட்டைச் சேர்ந்த பைசல் மிலாஹியின் அனுசரணையில் இலங்கைக்கான நிதாயுள் ஹைரா நிறுவனம் மற்றும் பீட் நிறுவணும் புல்மோட்டை அரஹுமா நிறுவனம் ஆகியன இணைந்து ஏற்பாடுகளை செய்திருந்தது.

இவ்இலவச குடிநீர் திட்ட வவுச்சர் வழங்கும் நிகழ்வுக்கு சவூதி தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதி பைசல் மிலாஹியின் வேண்டுகோளின் பேரில் நீர்வளங்க மற்றும் நகர திட்டமிடல் அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.

ஏனைய அதிதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹ்மத், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் ,மாகாண சபை உறுப்பினர் லாகிர் உட்பட சவூதி தொண்டு நிறுவன பிரதி நிதி பைசல் மிலாஹி, முன்னாள் குச்சவெளி பிரதே சபை தவிசாளர் ஏ.பி. முபாரக், பீட் நிறுவன பொறுப்பாளர் திரு. நியாஸ், புல்மோட்டை அரஹுமா நிறுவனதின் ஏற்பாட்டாளர்களான மௌலவிகளான அப்துல்லாஹ் மற்றும் நதீர் கிழக்கு மாகாண ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி ஆதம்பாவா ஆகியோர் கலந்துகொண்டனர்.

தெரிவு செய்யப்பட்ட 450 பயனாளிகளுக்கான இலவச குடிநீருக்கான வவுச்சர்கள் அதிதிகளால் பயணாளிகளிடம் வழங்ப்பட்டதோடு, மாபெரும் இப்தார் நிகழ்வும் நடைபெற்றது.

மேலும் ஏற்கனவே குடிநீர் வழங்கப்பட்ட இணைப்புகளையும் நீர்வளங்க மற்றும் நகர திட்டமிடல் அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் திறந்து வைத்தார்.

M.T. ஹைதர் அலி





  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்