Post views-

மரம் முறிந்து விழுந்து 2 வீடுகள் சேதம்

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெனில்வத்தை தோட்டம் பிளக்வோட்டர் பிரிவில் பாரிய மரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமாகியுள்ளது.

18.06.2106 அன்று மதியம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு உயிர் சேதம் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவிக்கும் பொலிஸார் வீடுகளில் உள்ள பொருட்கள் சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.

மரம் முறிந்து விழுந்ததன் காரணமாக இப்பகுதிக்கான மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளதோடு திருத்த பணிகளை மின்சார சபையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி மரத்தை அப்புறபடுத்தும் நடவடிக்கையில் தோட்ட நிர்வாகமும், பிரதேசவாசிகளும் ஈடுபட்டுள்ளனர்.

(க.கிஷாந்தன்)






  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்