Post views-

கொழும்பு ரோயல் கல்லுாாியின் 165வது பரிசலிப்பு விழா

கொழும்பு ரோயல் கல்லுாாியின் 165வது பரிசலிப்பு விழா கல்லுாாி மண்டபத்தில் புதிய அதிபா் பி.ஏ அபேரத்தின தலைமையில் நடைபெற்றது.  பிரதம அதிதியாக  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கௌரவஅதிதியாக பிரதமந்திரி ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொண்டு  திறமைகளை வெளிக்காட்டிய மாணவா்களது ஜனாதிபதி விருதுகள்  சிறந்த ஆசிரியா்களுக்கான  பரிசலிப்பு விருதுகளை ஜனாதிபதி மற்றும் பிரதமா், கல்வியமைச்சா் ஆகியோறும்  வழங்கி வைத்தனா். இதில் அமைச்சா்களான கல்வி அமைச்சா் அகில விராஜ் காரியவாசம்,  அமைச்சா் ரவுப் ஹக்கீம், கயந்த கருநாதிலக்க, ஹா்சா டி சில்வா, ரவி கருநாயக்க, மலிக் சமரவிக்கிரம மற்றும் கல்விஇராஜங்க அமைச்சா இராதா கிருஸ்னன், பழைய மாணவா்களும் ஆசிரியா்களும்  கலந்து சிறப்பித்தனா்

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி - இந்த நாட்டில் பிரபல்யமான பாடசாலைகளில் தமது பிள்ளைகளைச் சோ்ப்பதற்காக பெற்றோா்கள் அரசியல் வாதிகளையும் கல்வி அதிகாரிகளையும் நாடி படையெடுப்பதை அதிகாரிகள் தடுத்து சகல பாடசாலைகளும் பிரபல்யமான பாடசாலையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கல் வேண்டும. எந்தவொரு அரசாங்கமும் இதுவரை பாடசாலை அனுமதி குறித்து ஒரு முறையான திட்டம் வகுக்கவில்லை, இது குறித்து கல்வியமைச்சரும் அதிகாரிகளும் உரிய கவணம் செலுத்தி ஒரு நிலையான வலுவான திட்டமொன்றை வகுத்து பாடசாலை அனுமதிக்கான புதிய முறைமைய ஒன்றை ஏற்படுத்தும்படி ஜனாதிபதி வேண்டிக் கொண்டாா்.  சகல பாடசாலைகளும் சமமான முறையில் போட்டித் தண்மையற்ற முறையில் பாடசாலைகளை முன்னேற்ற வழிவகுக்குமாறும் ஜனாதிபதி வேண்டிக் கொண்டாா்.

(அஷ்ரப் ஏ சமத்)






  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்