Post views-

இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் MLAM.ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தாயார் காலமானார்.

-பழுலுல்லாஹ் பர்ஹான்-

மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் தாயார் அலியார் பாத்தும்மா (வயது 86) இன்று (19.11.2015) வியாழக்கிழமை அதிகாலை காலமானார் (இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.)

சுகவீனமுற்றிருந்த மேற்படி பாத்தும்மா இன்று அதிகாலை புதிய காத்தான்குடி முகைதீன் ஜும் ஆப்பள்ளிவாயல் வீதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து காலமானார்.

இவரின் ஜனாசா நல்லடக்கம் காத்தான்குடி முகைதீன் மெத்தைப்பெரிய ஜும்ஆப்பள்ளிவாயலில் இன்று வியாழக்கிழமை அஸர் தொழுகையின் பின்னர் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு அதே பள்ளிவாயல் மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

மேற்படி அலியார் பாத்தும்மா மர்ஹூம் மஹ்மூத்லெவ்வை ஆலீமின் மனைவியும் டாக்டர் எம்.எல்.ஏ.எம்.நஜிமுதீன், மௌலவி எம்.எல்.ஏ.எம்.காசீம் (பலாஹி), மர்ஹூம் எம்.எல்.ஏ.எம்.அமானுல்லாஹ், ஓய்வு பெற்ற ஆசிரியைகளான ஜனாபா றஹீமா சரிப்தீன், ஜனாபா கதீஜா லதீப், மர்{ஹம் எம்.எல்.ஏ.எம்.நிஹ்மத்துல்லாஹ், மற்றும் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மர்ஹூம் எம்.எல்.ஏ.எம்.பசீர், ஜனாபா சல்மா அமீர் ஹம்சா (காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினரும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர்) அகியோரின் தாயாருமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.




  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்