-அஷ்ரப் ஏ சமத்-
கம்பளை சாஹிரா கல்லுாாியின் பழைய மாணவர் சங்க கூட்டத்தில் அமைச்சா் ரவூப் ஹக்கீ்ம் ,முன்னாள் அமைச்சா் பேரியல் அஷ்ரப் , முன்னாள் அமைச்சா் இம்தியாஸ் பாக்கீா் மாா்க்கார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.
கம்பளை சாஹிராக் கல்லுாாியின் பழைய மாணவர் சங்க கொழும்புப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று கூடல் கொழும்பு ஹிங்ஸ்பரி ஹோட்டலில் கொழும்புக் கிளையின் தலைவா் முஸகி காசீம் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம பேச்சாளராக முன்னாள் ஊடக அமைச்சரும் சட்டத்தரணியுமான இம்தியாஸ் பாக்கீா்மாக்காா் கலந்து கொண்டு உரையாற்றினாா்.
இக் கல்லுாாி பற்றி உரையாற்றிய இம்தியாஸ் பாக்கீா் மாா்க்கார் முன்னாள் கல்வியமைச்சா் பதியுத்தீன் மஹ்மூத் காலத்தில் சிங்கள மொழிமூலம் தலைசிறந்ததொரு கல்லுாாியாக திகழ்ந்தது. அக்கால கட்டத்தில் இக் கல்லுாாி சகல துறைகளிலும் முன்னேறி இங்கு கற்ற மாணவ மாணவிகள் பல்வேறு துறைகளில் தோ்ச்சி பெற்று இன்றும் சிறந்த புத்திஜீவிகளாக திகழ்கின்றனா். இக் கல்லுாாி அக் கால கட்டத்தில் சிறந்து விளங்கியது. அக்காலத்தில் இக்கல்லுாாியில் கல்வி கற்ற முன்னாள் அமைச்சா் பேரியல் அஷ்ரப் தொட்டு பலா் கொழும்பில் உயா் பதவிகளை வகித்தனா் என இம்தியாஸ் பாக்கீா் மாக்காா் இவ் வைபவத்தில் மேலும் தெரிவித்தார்.




