Post views-

பாரிஸ் தாக்குதலில் இலங்கையர்களுக்கு பாதிப்பு இல்லை! - பாதுகாப்பை பலப்படுத்தியது சிங்கப்பூர்

பாரிஸில் இடம்பெற்ற தாக்குதல்களில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டதாக தகவல் எவையும் இதுவரை வெளியாகவில்லை.
நேற்று மாலை இடம்பெற்ற தாக்குதல்களில் நூறுக்கும் அதிகமானோர் பலியாகினர்.
இந்தநிலையில் பாரிஸில் உள்ள இலங்கையின் தூதரக தகவல்கள்படி இந்த சம்பவங்களில் இலங்கையர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிஸில் இடம்பெற்ற தொடர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு அவதானத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளது.
பாரிஸில் இடம்பெற்ற தொடர் தாக்குதல் சம்வத்தில் 153க்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
இதில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என பாரிஸ் துதரகம் தெரிவித்துள்ளதுடன், மேலும் அந்த நாட்டு அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டடுள்ளது.  
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்