யாழ்ப்பாணத்திலிருந்து சொகுசு பஸ்களில் கொழும்புக்கு கஞ்சா கடத்தி வரப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பொலிஸ் விசேட குழுவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று மாலை கொழும்பில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.
இதன்போது யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வந்து டாம் வீதியில் தரித்து நின்ற சொகுசு பஸ் ஒன்றின் மூலமாக கஞ்சா கடத்தி வரப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பஸ்ஸில் இருந்து சுமார் மூன்று லட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

 




 
