தமது விடுதலையை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று திங்கட்கிழமை 9 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் நான்கு கைதிகள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹன புஷ்புகுமார குறிப்பிட்டுள்ளார்.
வெலிக்கடை-மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் நால்வரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலை தொடர்பில் இறுதியான தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி உண்ணாவிரதத்தில் குதித்தனர். ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழியின் அடிப்படையில் தாங்கள் விடுவிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டியே தமிழ் அரசியல் கைதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளனர்.