Post views-

அபாயகர ஓளடதங்கள் சபையின் முன்னாள் தலைவர் பகிரங்க மன்னிப்புக் கோரல்

நாட்டிலிருந்து போதைப் பொருள் வியாபாரத்தை இல்லாதொழிக்க திட்டமிட்ட போதிலும், அதனை செயற்படுத்த முடியாமல் போனமைக்காக தான் கவலையடைவதாகவும், அதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோருவதாகவும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் முன்னாள் தலைவர் நிலங்க சமரசிங்க கூறியுள்ளார்.
நாட்டில் பாரியளவில் இடம்பெற்று வரும் போதைப் பொருள் வியாபாரத்தை இல்லாதொழிக்க தான் முழுமையாக செயற்பட்டதாகவும், இதனை இல்லாதொழிப்பதாக மக்களிடம் வாக்குறுதியளித்த போதிலும் அதனை இடையில் விடவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
போதைப் பொருள் வியாபாரத்தை ஒழிப்பதற்காக சர்வதேச புலனாய்வுத் துறையின் தொடர்புகளுடன், எமது நாட்டிலுள்ள சர்வதேச போதைப் பொருள் வியாபாரிகள் தொடர்பான தகவல்களை சேகரிப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்தேன். இதனை செயற்படுத்தினால், சர்வதேச போதைப் பொருள் வியாபாரிகளை மாத்திரமல்லாமல் அவர்களிடமுள்ள நிதியையும் இலங்கை அரசுடமையாக்க முடிந்திருக்கும் எனவும் முன்னாள் தலைவர் நிலங்க தெரிவித்துள்ளார்.
தேசிய அபாயகர ஓளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபைக்கு புதிய தலைவர் ஒருவர்  கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்