பாதாள உலக குழுவுடன் தொடர்புடையதாக கூறப்படும் "ப்ளூமெண்டல் பெதும்" எனப்படுபவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.
இவரை நேற்றிரவு கைது செய்ததாக அவர் தெரிவித்தார்.
ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மாவட்ட சுற்றிவளைப்பு பிரிவினால் "ப்ளூமெண்டல் பெதும்" எனப்படுபவர் கைது செய்யப்பட்டதாக ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் ப்ளூமெண்டல் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் இவர் தொடர்புபட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.




