விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு பட்டவர்கள் எனும் ரீதியில் கைது செய்யப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்திருப்பது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகியுள்ளதாக தெரிவிக்கின்ன ராவணா பலய, கருணா, கே.பி உட்பட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
விடுதலையானவர்கள் சாதாரணமானவர்கள் இல்லையெனவும் கரும்புலிகள் என அறியப்படும் தற்கொலைத் தாக்குதல்தாரிகளும் அதில் உள்ளடக்கம் எனவும் தெரிவிக்கும் அவ்வமைப்பு எந்த நம்பிக்கையின் அடிப்படையில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என கேள்வியெழுப்பி ஜனாதிபதி செயலகம் முன்பாக குழுமியிருந்தது.
இந்நிலையில் அங்கு கருத்து வெளியிட்ட அவ்வமைப்பின் தலைவர் செயலாளர் இத்தேகந்த சதாதிஸ்ஸ ஹிமி, நைனா தீவின் பெயர் மாற்றப்பட்டால் கொழும்பில் ஒரு தமிழ்ப் பெயர் கூட இல்லாது அழிப்போம் என சூளுரைத்ததோடு தாம் இதுவரை ‘இனவாதிகள்’ இல்லையெனவும் தம்மை இனவாதிகளாக்க வேண்டாம் எனவும் விடுதலைப்புலிகள் விடுதலையானது கோத்தாபாய, மஹிந்த போன்றோரின் உயிருக்கு ஆபத்தை உருவாக்கியுள்ளது எனவும் அங்கு அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
 

 



 
