காலி கொழும்பு பிரதான வீதியின் களுவெல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் வாகனமொன்று பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
விபத்தில் பாதசாரி உயிரிழந்துள்ளதுடன் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மோட்டார் வாகன செலுத்துனர் இன்று (15) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
இதேவேளை கடவத்தை – கனேமுல்ல – வலவ்வத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.




