24வது பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு, இம் மாதம் (நவம்பர்) 27ம் திகதி தொடக்கம் 29ம் திகதி வரை மால்டாவில் இடம்பெறவுள்ளது.
பொதுநலவாய தலைவர்களின் முதலாவது மாநாடு 1971 இல் சிங்கப்பூரில் நடைபெற்றது. இம் மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை அவ் அமைப்பின் உறுப்பு நாடு ஒன்றில் இடம்பெறும்.
மேலும் குறித்த மாநாடு நடைபெறும் நாட்டின் அரச தலைவர், பிரதமர் அல்லது ஜனாதிபதி மாநாட்டுக்குத் தலைமை வகிப்பதோடு, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவரே பொதுநலவாய நாடுகள் அமைப்பின் நடப்புத் தலைவராகவும் செயல்படுவார்.
இதன்படி கடந்த 2013ம் ஆண்டு இலங்கையின் கொழும்பில் பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.
இதன்படி பொதுநலவாய அமைப்பின் தற்போதைய தலைவர் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆவார். இந்தநிலையில் விரைவில் அந்தப் பதவி மால்டா அரசுக்கு செல்லவுள்ளது.
இதேவேளை இம்முறை மாநாட்டில் இங்கிலாந்தின் மகாராணியும் கலந்துகொள்ளகின்றார்.




