பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற தொடர் தாக்குதல்களில் குறைந்தது 153 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பிரெஞ்சு காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
பாரிஸில் பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் குண்டு வெடிப்புக்களையும் துப்பாக்கிச் சூடுகளையும் மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து காவல் துறையினர் மேற்கொண்ட பதில் நடவடிக்கையில் குறைந்து 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
தேசிய விளையாட்டு அரங்கு, ஒரு உணவு விடுதி மற்றும் இசை அரங்கு போன்ற வெவ்வேறான இடங்களில் இத்துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றுள்ளன.
தாக்குதல் சம்பவத்தை அடுத்து பிரான்சில் தற்போது அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்களை அடுத்து அனைத்து எல்லைகளையும் பிரான்ஸ் மூடியுள்ளதுடன் பாரிஸ் நகரிலுள்ள மக்கள் அனைவரையும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த தாக்குதலின் பின்னணியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் இருக்கலாம் என்று சந்தேகிக்கிக்கப்படுகிறது.




