Post views-

இன வன்முறைகளை தூண்டி தேர்தல் முடிவுகளை இடைநிறுத்த மகிந்த திட்டம்!


இன வன்முறைகளை தூண்டி ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை இடநிறுத்தும் திட்டம் ஒன்றை மகிந்த ராஜபக்ஷ மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தனக்கு பாதகமாக அமையும் என எதிர்வு கூறப்படுவதன்  காரணமாக அதிகாரத்தில் தொடர்ந்தும் இருக்கும் இறுதி முயற்சியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்த திட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக தி இண்டிபெண்டன் தெரிவித்துள்ளது.

தேர்தல் தினத்தில் வாக்களிக்கும் நிலைமைகளை கவனத்தில் கொண்டு இனவாத மோதல் ஒன்றை ஏற்படுத்தி தேர்தல் முடிவுகளை இடைநிறுத்த மகிந்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இவ்வாறான இன வன்முறை குழப்பம் ஏற்பட்டால் தேர்தல் முடிவுகளையும் வாக்கு எண்ணப்படுவதையும் பாதிக்கக் கூடிய பின்னணியை உருவாக்க முடியும் என திட்டமிட்டுள்ளோர் நம்புகின்றனர்.

நாட்டில் இன ரீதியான குழப்பம் ஏற்பட்டால் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்த முடியும்.

இதனடிப்படையில் பல்வேறு காரணங்களை தெரிவித்து மீண்டும் தேர்தல் ஒன்று அறிவிக்கப்படும் வரை ஜனாதிபதி தனது பதவியை தக்கவைத்து கொள்ள முடியும்.

உலகில் பல்வேறு சர்வாதிகார நாடுகளில் தேர்தலில் சாதகமற்ற நிலைமை ஏற்படும் போது இப்படியான நடைமுறைகள் பின்பற்றபட்டுள்ளதுடன் ராஜபக்ஷவினரும் இந்த தந்திரத்தை பயன்படுத்த தீர்மானித்துள்ளனர்.

இந்த முயற்சி குறித்து தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்ய எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்