Post views-

அசாத் சாலியின் பாதுகாப்பு பறிக்கப்பட்டது


மத்திய மாகாணசபையின் உறுப்பினரும் தமிழ் முஸ்லிம் தேசிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலிக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பாதுகாப்பு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு வழங்கியிருந்தனர்.
மாகாணசபை உறுப்பினர் மற்றும் அரசியல் கட்சியொன்றின் தலைவர் என்ற ரீதியில் அசாத் சாலிக்கு பாதுகாப்பு வழங்குமாறு மஹிந்த தேசப்பிரிய அறிவுறுத்தல் விடுத்திருந்தார். பாதுகாப்பு அமைச்சின் உத்தரவிற்கு அமைய பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்ய உள்ளதாக அசாத் சாலி அறிவித்துள்ளார்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்