Post views-

சென்னை காதல் ஜோடிகள் திண்டாட்டம்:போலீசார் கெடுபிடி அதிகம்


கடற்கரைக்கு காதலனுடன் வந்த மாணவி கடத்தி செல்லப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கடற்கரைக்கு வந்த காதல் ஜோடிகள், போலீசாரின் கெடுபிடியால் ஏமாற்றத்துடன் திரும்பினர். சென்னை நீலாங்கரை கடற்கரையில் சில நாட்களுக்கு முன் காதலனுடன் வந்த இளம்பெண்ணை போலீஸ் என கூறி, ஒரு வாலிபர் மிரட்டி அழைத்து சென்று பலாத்காரம் செய்த சம்பவம் நடந்தது. இதையடுத்து, புத்தாண்டு கொண்டாட்டங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, பாதுகாப்பை பலப்படுத்துமாறு மாமல்லபுரம் போலீ சாருக்கு எஸ்பி விஜயகுமார் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து புத்தாண்டை ஒட்டி மாமல்லபுரத்துக்கு வந்த காதல் ஜோடிகள், போலீசாரால் விரட்டப்பட்டனர்.

குறிப்பாக, திருவிடந்தை, கோவளம், செம்மஞ்சேரி, வடநெம்மேலி, பட்டிப்புலம் ஆகிய பகுதிகளில் கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் ஏராளமான சவுக்கு தோப்புகள் உள்ளன. சாலையோரம் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு, காதல் ஜோடிகள் சவுக்கு தோப்பு மறைவிடங்களில் கொஞ்சி மகிழ்வது வழக்கம். நேற்று மாமல்லபுரம் டிஎஸ்பி மோகன், இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் பெண் போலீசார் உதவியுடன் சவுக்கு தோப்புக்குள் நுழையும் காதல் ஜோடிகளை எச்சரித்து அனுப்பினர். மேலும், மாமல்லபுரத்தில் உள்ள பல்வேறு சிற்பங்களுக்கு பின்புறம், பதுங்கி இருந்த காதல் ஜோடிகளையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர். போலீஸ் கெடுபிடியால் புத்தாண்டு கொண்டாட வந்த காதல் ஜோடிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

மேலும், புத்தாண்டை ஒட்டி நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பைக், கார், வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் சென்றனர்.முட்டுக்காடு படகு துறை அருகே மாமல்லபுரம் மற்றும் கேளம்பாக்கம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். ஓட்டல்களில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான அனுமதி அட்டைகள் இல்லாதவர்களையும், ஹெல்மெட் அணியாதவர்களையும், போதையில் வந்தவர்களை யும் திருப்பி அனுப்பினர். நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும், கிழக்கு கடற்கரை சாலை யில் ஏராளமானோர் பட்டாசு வெடித்து சாலையில் செல்வோருக்கு புத்தாண்டு வாழ்த்து கூறினர். மேலும், ஏராளமான தனியார் ஓட்டல்கள், கடற்கரை ரிசார்ட்கள், பண்ணை வீடுகளில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது.(தி)
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்