ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அக்கரைப்பற்று மத்திய குழுவின் ஏற்பாட்டில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு அக்கரைப்பற்று மணிக்கூட்டுக் கோபுர அருகாமையில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் மற்றும் அக்கரைப்பற்று மத்திய குழுவின் தலைவரும், மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம்.ஹனீபா மதனி ஆகியோரது ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இப்பொதுக்கூட்டத்தில் பிரதம பேச்சாளராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவுப் ஹக்கீம் கலந்து கொண்டார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், கட்சியின் உச்சபீட உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அக்கரைப்பற்று மக்கள் அலைபோல் திரண்டு வந்து இக்கூட்டத்தில் கலந்து கொண்டமை வரலாற்ற நிகழ்வாக அமைந்தது. கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அக்கரைப்பற்றுக்கு வருகின்றபோது, பலவிதமான அசம்பாவிதங்கைளை மாற்றுக்கட்சியினர் மேற்கொண்டிருந்த போதிலும் இன்று பெரும் வெற்றியுடன் நடைபெற்று முடிந்தமை குறிப்பிடத்தக்கது.